கால்பந்தில் ஆர்வம் காட்டும் அஜித் மகன்! குவியும் வாழ்த்துகள்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் - ஷாலினி
அஜித் – ஷாலினிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். பின்னர், 2015ம் ஆண்டு ஆத்விக் பிறந்தார்.
மகன் ஆத்விக்
இவரது மகன் ஆத்விக் தற்போது சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
7 வயதே ஆன ஆத்விக் தற்போதே கால்பந்தில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.
கால்பந்து விளையாட்டில் தீவிரம்
இந்நிலையில் ஷாலினியுடன் ஆத்விக் மற்றும் இதர மாணவர்கள் இணைந்து சென்னையின் எஃப்.சி. சீருடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியது.
கால்பந்து சீருடையில் ஆத்விக்கின் படம் வெளியானதையடுத்து குட்டி தல என்று பதிவிட்டு பல ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பு ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.