அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன் - வைரலாகும் டுவிட்
நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தன் குழந்தைகளுடன், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். சமீபத்தில் தங்களின் குழந்தைகளின் பெயரை வெளிஉலகத்திற்கு அறிவித்தனர்.
சமீபத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். ஏகே 62 கை நழுவிப் போனதையடுத்து, எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
வாழ்த்து தெரிவித்த விக்னேஷ்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்தப் பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சியே எங்களுக்கு எல்லாமே. நிபந்தனையற்ற காதல் என்றும் நிரந்தரம். விடாமுயற்சி #AK62 மகழ்ச்சி திருமேனிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Happy birthday #AjithSir ❤️???❤️❤️
— VigneshShivN (@VigneshShivN) April 30, 2023
your happiness is everything for us ??❤️❤️
Unconditional love Endrum nirandharam ❤️???????❤️❤️
All the best for #VidaMuyarchi #AK62 magizhThirumeni sir , @anirudhofficial nirav sir @LycaProductions @SureshChandraa and the whole… pic.twitter.com/ZZeipYAvC7