மகனுக்காக கிரவுண்டில் குடும்பமாக களமிறங்கிய பிரபலம்- புகைப்படத்தை பார்த்து குஷியாகிய ரசிகர்கள்!
மகனுக்காக கிரவுண்டில் குடும்பமாக களமிறங்கிய அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஜித்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்.
இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து “ விடாமுயற்சி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இந்தியாவில் ஷீட்டிங் முடித்து விட்டு துபாயில் ஷீட்டிங்கில் இருக்கிறார்.
கிரவுண்டில் வெளியான புகைப்படம்
இந்த நிலையில், தன் மகன் ஆத்விக் உடன் ஃபுட்பால் கிரவுண்டில் அஜித் களமிறங்கிய போட்டோ வைரலாகி வருகிறது.
ஷீட்டிங் முடித்து விட்டு 5 நாட்கள் விடுமுறையில் வீடு திரும்பிய அஜித் மகனுக்காக கிரவுண்டிற்கு குடும்பமாக வருகை தந்துள்ளார்.
அஜித் நடிகர் மட்டுமல்ல கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் மேக்கிங் என வெரைட்டியாக மாஸ் காட்டி வருகிறார்.
அவரின் காதல் மனைவி சாலினி நடிகை மட்டுமல்ல பேட்மிண்டன் பிளேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ குழந்தைகளுக்காக தல இப்படியெல்லாம் செய்கிறாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |