சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் மகனை பார்த்துருக்கீங்க? அழகிய புகைப்படங்கள்
முதல் முறையாக தன்னுடைய மகனின் முகத்தை இணையவாசிகளுக்கு காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஜய் கிருஸ்ணா பின்னணி
பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிப்பரப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானவர் தான் பாடகர் அஜய் கிருஷ்ணா.
இவரின் குரலுக்கு இன்றும் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து அஜய் கிருஸ்ணா தற்போது விஜய் தொலைக்காட்சியில் வரும் போட்டிகளுக்கு பாடல் பாடி கொண்டிருக்கிறார்.
அஜய் கிருஸ்ணா சமீப காலத்திற்கு முன்பு ஜெஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜெஸி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை புகைப்படத்துடன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
குழந்தையை பார்த்துருக்கீங்களா?
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெசியின் பிரசவ வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையொன்றும் பிறந்துள்ளது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஜய் கிருஸ்ணா தன்னுடைய மனைவி - ஜெசி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் அவரின் மகன் ஜெசி போல் கலராகவும், அஜய் கிருஸ்ணாவின் முகசாடையிலும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,அஜய் கிருஸ்ணாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.