முதன்முறையாக தன் மகனின் முகத்தை காட்டிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ஜெனிபர், தனக்கு பிறந்த இரண்டாவது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இல்லத்தரசிகளின் கஷ்டத்தை பிரபதிபலிக்கும் சீரியலாக ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் தொடர் பாக்கியலட்சுமி.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர், இதற்கு முன்பு சினிமாவில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது இந்த சீரியல் தான்.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருந்ததாலும், இவரது கதாபாத்திரம் நெகடிவ்வாக மாறும் என்பதாலும் சீரியலில் இருந்து விலகினார்.
சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது, ஏற்கனவே மகன் உள்ள நிலையில், 2வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தையை கையில் ஏந்தியபடி ஜெனிபர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.