தனுஷின் பிரிவிற்கு பின்பு ஐஷ்வர்யாவின் அவதாரம்! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு
தனுஷின் பிரிவிற்கு பின்பு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா முஸாபிர் பாடலுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ், ஐஸ்வர்யா தனது 18 ஆண்டுகள் வாழ்க்கையை பிரிந்த நிலையில், இவர்களை சேர்த்து வைப்பதற்கு ரஜினிகாந்த் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
கணவரை பிரிவதாக செய்தி வெளியானத்திலிருந்தே அனைவரின் பார்வையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நோக்கியே இருந்தது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
பல துயரங்களை கடந்தும் ஐஸ்வர்யா தனது பணிகளிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அவரது பணியில் கவனம் செலுத்தி வந்தார். ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே ஒருவரையொருவர் குறை கூறி கொள்ளாமல் அவர்களது திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் திருப்தியை அளித்திருக்கிறது.
இந்நிலையில் அன்கித் திவாரி இசையமைப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முஸாபிர் என்கிற பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த பாடலை தமிழில் அனிருத் பாடுகிறார், அதேபோல தெலுங்கு மொழியில் சாகர் என்பவரும் மற்றும் மலையாள மொழியில் ரஞ்சித் கோவிந்த என்பவரும் பாடியுள்ளனர்.
இந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முஸாபிர்' பாடல் செட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களுடன் பாடலின் படப்பிடிப்பு நிறைவுற்றதாகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் மார்ச் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.