நான் நலமுடன் உள்ளேன்: வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தின் வெளியிட்ட ஆடியோ பதிவு!
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ம் திகதியில் மயக்கம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சையில், மூளைக்கு செல்லும் கழுத்துப்பகுதியில், உள்ள ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் அடைப்பை சரி செய்து, சரியாக உள்ளா வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவித்த நிலையில், பல கோடி ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய போது குடும்பத்தினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் நான் நலமுடன் இருப்பதாக ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில், “அனைவருக்கும் வணக்கம், சிகிச்சை முடிந்து நான் நலமுடன் உள்ளேன்.
இரவு தான் வீடு திரும்பினேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. என அவரி ஹூட் செயலி மூலம் ஆடியோவை வெளியிட்டுள்ளார்”.
Returned home ? https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021