“3” படத்தில் ஆரம்பித்த விரிசல்: தொல்லை தாங்க முடியாமல் பிரிந்து விட்டேன்!
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கான காரணத்தை புலம்பிக் கொண்டியிருக்கிறார்.
தனுஷ்-ஐஸ்வர்யா
அண்மையில் திரை உலகில் நிறைய நிறைய திருமணங்கள், விவாரத்துக்கள், மரணங்கள் என இன்பம் துன்ப விடயங்கள் அடுத்தடுத்து ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றது.
சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது காலம் காலமாக நடைபெறும் ஒரு விடயம் தான். இவ்வாறு திருமணம் செய்துகொண்டு பலர் தற்போது விவாகரத்தை அறிவித்து வருகின்றார்கள்.
இவ்வாறு இருக்கையில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது.
ஆனால் இருவரும் திருமணத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
காரணம்
இந்நிலையில் இதுதான் விவகாரத்திற்கு காரணம் என ஒரு செய்தி தற்போது பேசப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், 2012ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சுருதிஹாசன் என பல பிரபலங்கள் நடித்த திரைப்படம் தான் “3” இத்திரைப்படத்தை இயக்கியது தனுஷின் மனைவி தான்.
இந்நிலையில், 3 படத்தின் ஒரு விழாவில் தனுஷ் பேசிய போது, தன் மனைவி மீதான வாதங்களை சொல்லிக் கொண்டே போனார். என்னவென்றால், இத்திரைப்படத்தில் நான் நடித்த போது மொத்த அதிகாரத்தையும் ஐஸ்வர்யாதான் வைத்திருந்தார்.
மேலும், என்னை மிகவும் டோர்ச்சர் செய்தார், எதற்கெடுத்தாலும் என்னை வா போ என மிரட்டி அலைக்கழித்துக் கொண்டே இருந்தார் என விளையாட்டாக பேசியிருப்பார்.
ஆனால் தனுஷ் கூறியதை எல்லாம் ஐஸ்வர்யா மறுத்து இருந்தார். இந்த விடயம் தான் இவர்கள் இருவருக்கும் விரிசலை உண்டு பண்ணியது.
இந்த விடயம் முதல் தான் இவர்கள் இருவரும் விவாகரத்துக்கோர காரணமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.