தனுஷின் ட்விட்டுக்கு ஐஸ்வர்யா கொடுத்த பதில்! விவாகரத்தில் ஏற்பட்ட புதிய ட்விஸ்ட்
தனுஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு ஐஸ்வர்யா பதில் கொடுத்துள்ள ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காதல் திருமணம்
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் இவர்கள் தனது வாழ்க்கை குறித்து எடுத்த முடிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விவாகரத்தை அறிவித்த ஜோடி
ஆம் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர். இதன் பின்பு இருவரும் தங்களது வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றனர்.
இடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, சிகிச்சைக்கு பின்பு முசாபிர் பாடலை தயாரித்து முடித்தார். இந்த பாடலின் ப்ரொமோ கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தனுஷின் ட்விட்டர் பதிவ
விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷும் வாத்தி, நானே வருவேன் படப்பிடிப்புகளில் பிசியானார். கவலைகளை மறக்க அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
இந்நிலையில் 'மாறன்' படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதில் திடீர் திருப்பமாக தனுஷின் இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
#maaran is now yours !! Om namashivaaya ?? https://t.co/IgZ9D4kT7Z
— Dhanush (@dhanushkraja) March 11, 2022
பாலா, தாமரை இடையே ஏற்பட்ட பிரிவு: எமோஷ்னல் காட்சி