ரஜினிக்கு அடுத்த தலைவலி... கொழுந்தனை இயக்கப் போகும் ஐஸ்வர்யா! தங்கை வாழ்வில் சிக்கல்
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கண்டித்து வைக்கும்படி அப்பா ரஜினிகாந்திடம் சவுந்தர்யா கண்கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யாவால் ரஜினிகாந்த் குடும்பத்தில் புதிய பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அதாவது ஐஸ்வர்யாவின் தங்கை கணவரான விசாகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள நிலையில் தனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விசாகனிடம் ஐஸ்வர்யா கேட்டதாக தகவல் வெளியானது.
தங்கையின் கணவரை ஹீரோவாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா
விசாகனுக்காக ஐஸ்வர்யா கதையையும் கூறியுள்ளார்.
ஆனால் தனது கணவர் விசாகன் சினிமாவில் நடிப்பதை சற்றும் விரும்பாத சவுந்தர்யா கதை பிடிக்கவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் அனிதா கர்ப்பமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்.... ஸ்மைலியை பகிர்ந்து பதில்!
விசாகனை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றும் கூறி வருகிறாராம். விசாகன் சினிமாவில் நடித்தால் தனுஷைப் போல் நடிகைகளுடன் தொடர்பு ஏற்படும் என்றும் இதனால் தனது வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும அச்சப்படுகிறாராம்.
சூப்பஸ்டார் ரஜினிக்கு வந்த தலைவலி
ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனையால் நிம்மதியை இழந்துள்ள ரஜினிகாந்துக்கு தற்போது சவுந்தர்யாவின் பிரச்சனை புது தலைவலியை கொடுத்துள்ளதாம்.
தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனைக்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினிகாந்த், யாரிடமும் பழையப்படி பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இதில் தற்போது வெடித்துள்ள புதிய பிரச்சனையால் ரஜினி குழப்பத்தில் உள்ளாராம்.