ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பதில் இயக்குனர் வீரபாண்டியனுக்கா? கேள்வியில் ரசிகர்கள்
இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'அவர்களும் இவர்களும்' எனும் படத்தின் மூலம் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடித்த படங்களில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இவர் தமிழ் படம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இந்த வகையில் ஜஸ்வர்யா ராஜேஷ் பற்றி இயக்குனர் வீரபாண்டியன் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது.
இயக்குனர் வீரபாண்டியன்
இவர் பேசுகையில், ஜஸ்வர்யா ராஜேஷை திரையுலகிற்கு கொண்டு வந்தது நான் தான். எனது முதல் படத்தொடக்கமே ஐஸ்வர்யா ராஜேஷை வைத்துத்தான் எடுத்தேன். ஆனால் இதை ஐஸ்வர்யா எந்த பேட்டிகளிலுமே கூறவில்லை.
அவர் இப்போது முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், இதற்கு நான் தான் காரணம், ஆனால் இப்போது என்னுடன் வேலை செய்வதற்கு அவர் விரும்பவில்லை.
ஐஸ்வர்யா ராஜேஸ் பணத்திற்கு கஷ்டப்பட்ட போது அவரிடம் ஆட்டோவுக்கு கூட பணம் இல்லாத நேரத்தில் பணம் கொடுத்து உதவி செய்தேன், அவர் படம் நடிக்க வந்த போது அவருக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வந்தது.
அதை எல்லாம் சமாளித்து நான் அவருக்கு படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் அந்த நன்றி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இல்லை என்றும் பேசி இருந்தார்.
இயக்குனர் வீரபாண்டி பேசிய இந்த விஷயத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஸ் எந்த விளக்கமும் கூறாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை நிர்ணயிப்பது வாழ்க்கையையும் உறவையும் கெடுத்துவிடும்.
அதனால் மொத்த கதையையும் தெரிந்து கொண்ட பின்பு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளையும் ஒருவரை நோக்கி தாக்குதல்களையும் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.
Thought of the Day ? pic.twitter.com/sisjRcZnQC
— aishwarya rajesh (@aishu_dil) January 29, 2024