காஜல் மகன் கார் ஓட்டும் அளவிற்கு வளந்திட்டாரா? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
காஜல் அகர்வால் என்றால் தமிழ் சினிமாவில் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தனது க்யூட்டான நடிப்பின் மூலம் மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
தமிழில் வெளிவந்த ஆல் இன் ஆல் இழகுராஜா ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவைக்கு பிரபலமான படமாகும்.
இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிரதானமாக நடித்து வருகிறார். அவர் சினிமாவிற்கு ஹிந்தி படத்தில் மூலம் அறிமுகமானாலும், தமிழில் இவரது முதல் படம் பழனி ஆகும்.
இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக காஜல் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நடித்த நான் மகான் திரைப்படம் இவருக்கு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுடன் நடித்தார். பின்னர் இவரின் காதலரான கெளதம் கிட்ச்லு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது .
காஜல்
காஜல் சமீபத்தில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு சின்மாவில் பிஸியாக உள்ள காஜல் அகர்வால் தனது குடும்பத்திற்கும் அதே முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார்.
தற்போது வெகேஷனுக்காக வெளிநாடு சென்றிருக்கும் காஜல் மற்றும் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு வெக்கேஷனின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் தனது இன்டாக்கிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் நீல் கார் ஓட்டுவதுபோல போஸ் கொடுத்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலின் மகனுக்கு கார் ஓட்டத் தெரியுமா? இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா? அவர் என தங்கள் கருத்துக்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.