வெற்றி மாறனிடம் தான் கேட்க வேண்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பற்றி நடிகை கருத்து
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ராஜ்மோகனுக்கு திரைத்துறை கொடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வென்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். தனது அமைச்சரவையையும் நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்தார்.
அதில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் தவெகவை சேர்ந்த ராஜ்மோகன் திரைப்பட துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்தாலும் திரைத்துறையை சேர்ந்த பலர் இதற்கு ஆதரவும் தெரிவித்திருந்தனர். அதில் ஜஸ்வர்யா ராஜேசும் ஒருவர்.
இந்த நிலையில் விருதுநகரில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ராஸ்மோகன் திரைத்துறைக்கு தெரிவானது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா விருது நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது “வடசென்னை 2 பற்றி அப்டேட் வேண்டும் என்றால் நீங்கள் வெற்றி மாறனிடம் தான் கேட்க வேண்டும்.
நானும் உங்களை போல அந்த படத்திற்காகத்தான் காத்து இருக்கிறேன் என்றார். தொடர்ந்து அவரிடம் திரைத்துறை அமைச்சராக ராஜ்மோகன் பதவியேற்றது குறித்து செய்தியாளர் கேள்வி கேட்டார்”.

இதற்கு பதில் கொடுத்த ஐஸ்வர்யா “நிச்சயமாக அவர்கள் சரியான முடிவை தான் எடுத்திருப்பார். ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்கு காரணமில்லாமல் அந்த பதவி கிடைக்காது.
ஏதோ ஒரு திறமை இருந்ததால்தான் அந்த பதவி அவருக்கு கொடுத்து இருப்பார்கள். நானும் உங்களைப் போலவே இந்த ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |