விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய்! சட்டென்று முகம்சுழித்த த்ரிஷா: வைரல் காட்சி இதோ
நடிகர் விக்ரம் கன்னத்தில் ஐஸ்வர்யா ராய் கை வைத்த நிலையில், அருகே நின்ற திரிஷா முகம்சுழித்தது போன்ற காட்சி தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொன்னியின் செல்வன்
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
வரும் 30ம் தேதி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.
விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய்
நடிகர் நடிகைகள் இப்படத்தில் ப்ரோமோஷன் பணிகளுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் செட் மேக்கிங் வீடியோ, Glimpse வீடியோ, ஷூட்டிங் போட்டோஸ் என வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கன்னத்தில் கை வைத்தார். அதைபார்த்து திரிஷா திரும்பியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வெளியாகி, விக்ரம் கன்னத்தில் எதுக்கு ஐஸ்வர்யா ராய் கை வைத்தார்? த்ரிஷா முகம் சுளித்தாரா? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
Aishwarya Rai touching Vikram's cheek, ear.. Whatever be the reason, it is cute ?❤?. #AishwaryaRaiBachchan #ChiyaanVikram? #PonniyinSelvan1 #PonniyinSelvan pic.twitter.com/QU9zdpex6D
— Mohabbatein PS 1,VV on Sept 30 (@sidharth0800) September 27, 2022