50 வயதிலும் பொறாமை பட வைக்கும் அழகு: நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு என்ன?
நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பின்பு சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ராய். இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான ஜீன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படம் பிரம்மாண்ட வெற்றியை அளித்த நிலையில், தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவித் தொடங்கியது. முக்கியமான கதையை தெரிவு செய்து நடித்த இவர் குரு படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சன் மீது காதல் வயப்பட்டார்.
பின்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது. சுமார் 12 ஆண்டு இடைவெளிக்கு பின்பு தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார்.
இவ்வாறு நடிப்பில் உச்சத்தில் இருக்கும் இவர் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதைத் தொடர்ந்து இவரது சொத்து விபரமும் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாகவும், இவரது ஆண்டு வருமானம் 80 முதல் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது.
விளம்பரப் படங்களுக்கு 5 முதல் 6 கோடி ரூபாய் சம்பளம் பெறும் இவரது சொத்து மதிப்பு சுமார் 776 கோடி என்றும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் இவருக்கு சொத்து இருக்கின்றதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |