அதிக படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணமா? ஐஸ்வர்யா ராய் விளக்கம்
உலக அழகி ஐஸ்வர்யா ராய். இன்று வரை அப்பப்பா...என்ன அழகு என்று கூறுமளவுக்கு அதே அழகுடன் காணப்படுகின்றார்.
இவர் தமிழில் ஜீன்ஸ், எந்திரன், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
திருமணத்துக்குப் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள ஐஸ்வர்யா, இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார்.
image - Ani news
இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா ராயிடம் அதிக படங்களில் நடிக்காததன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, “இந்த கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். நான் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர் அதனால் இந்தக் கேள்வியை கேட்கின்றனர். இதை நான் பெரிய விருது போல் நினைக்கிறேன்.
image - NDTV.com
அதுமட்டுமில்லாமல் சினிமாத் துறை என்பது புதுமைகள் நிறைந்தது. எது ரசிகர்களுக்கு பிடிக்கும் நல்ல கதை என்று தோன்றுகிறதோ அதில் நடிக்கிறேன். மணிரத்னம் என்னை ஒரு நடிகையாக எப்போதும் ஊக்கப்படுத்துவார்.
இதை உன்னால் செய்ய முடியும் என்று கூறுவார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தபோது ஒரு மாணவியைப் போல் எல்லா வசனத்தையும் எழுதி கற்றுக்கொண்டு நடித்தேன்” என்றார்.