பொது இடத்தில் கணவர் அபிஷேக்பச்சனை முறைத்து கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்?
பொது இடத்தில் கணவர் அபிஷேக்பச்சனை முறைத்து கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்யின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இதனையடுத்து, இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் போன்ற படங்கள் இவர் தனது திறமையால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
கடந்த 2007ம் ஆண்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும், இந்தி திரையுலக நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 11 வயதில் ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
அபிஷேக்பச்சனிடம் கோபப்பட்ட ஐஸ்வர்யா ராய்?
திருமணமான சில வருடங்களிலேயே ஐஸ்வர்யா -அபிஷேக் தம்பதியினரிடையே அவ்வப்போது ஈகோ மோதல் எழுந்து வருவதாக ஊடகங்கள் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இடையே சமீப நாட்களாக மனக்கசப்பு இருந்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
புரோ கபடி லீக் போட்டி ஒன்றில் தனது கணவர் அபிஷேக் பச்சனின் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி விளையாடும் போட்டியைக் காண ஐஸ்வர்யா ராய் வந்திருந்தார். அவருடன் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா மற்றும் அபிஷேக்கின் சகோதரியின் மகள் நவ்யா நந்தா ஆகியோர் உடன் வந்தனர். அப்போது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயிடம் ஏதோ ஒன்று கூற, அதற்கு ஐஸ்வர்யா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், அபிஷேக் பச்சனை பார்த்து கண்களை உருட்டி முறைத்து கத்தினார். அவர் உறவினர் மீதும் கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.