வெறும் காலுடன் ஆஸ்கர் விருது வாங்க சென்ற தெலுங்கு பிரபலம்! எதனால் இப்படி?
ஐயப்பன் மாலை அணிந்துள்ள நடிகர் ராம்சரண், வெறும் காலுடன் விமான நிலையத்தில் நடமாடிய வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். இவரின் நடிப்பிற்கும் எக்ஷனுக்கும் தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து சுமார் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தான் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள். இது தொடர்பாக ராம் சரணின் தந்தையான சீரஞ்சிவி அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
காலில் செருப்பில்லாமல் விமானத்தில் நடமாடிய ராம் சரண்
இந்த நிலையில் நடிகர் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நாயகர்களாக நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ராம் சரண் அமெரிக்காவிற்கு இன்று சென்றுள்ளார்.
அப்போது அவர் காலில் செருப்பு இல்லாமல் வந்த போது விமான நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தெய்வத்திற்கு மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும் மற்றும் ராம் சரணின் வேண்டுதல் தன்னுடைய குழந்தைக்காகவும் இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்கள்.
Here's Glimpses of our #ManOfMassesRamCharan garu as he sets off to the next stop on the #RRR course - The #Oscars2023 ✨️#MegaPowerStar @AlwaysRamCharan ❤️??#RamCharan #NaatuNaatuForOscars pic.twitter.com/hkm7ivnMQU
— RC YuvaShakthi (@RcYuvaShakthi) February 21, 2023