மேடையில் பாட்டுப் பாடி அசத்திய விக்ரம் - வியந்து போன ரசிகர்கள்!
மேடையில் பாட்டுப் பாடி அசத்திய நடிகர் விக்ரமின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய உடலை வருத்தி, உருமாறி நடிக்கக்கூடியவர். சேது, காசி, அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்பட படங்களில் இதை விக்ரம் நிரூபித்து காட்டியிருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் உட்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனைப் படைத்தது.
மேடையில் பாட்டுப் பாடி அசத்திய விக்ரம்
இந்நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இதனையடுத்து, இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று பெங்களூரில் PS2 நட்சத்திரங்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மேடையில் நடிகர் விக்ரம், தொகுப்பாளருடன் சேர்ந்து சூப்பராக பாட்டுப்பாடி அசத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.