புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஐஸ்வர்யா லட்சுமி! வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி செம ட்ரெண்டிங் உடையில் இதுவரை யாரும் பார்க்காத அளவுக்கு புதிய தோற்றத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் தோன்றி பெண்களின் மனம்கவர் நடிகையாக மாறினார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெருமளவான பெண் ரசிகர்களை இவருக்கு உருவாக்கிக் கொடுத்தது.
தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் ஹலோ மம்மி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் ட்ரெண்டிங் ஆடையில் புதிய தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
