வீட்டு வாடகை கூட தர முடியாமல் தவித்த குடும்பம்.. இப்போ பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கு தெரியுமா?
தனது வீட்டிற்கு வாடகை கூட தரமுடியாமல் தவித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா தற்போது பிறந்த நாளை எங்கு கொண்டாடியுள்ளார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு ஜோடியாக “சிக்கந்தர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
“Goodbye” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, Mission Majnu, Animal, Chhaava என அடுத்தடுத்து இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டை கலக்கி வருகிறார்.
National Crush என்ற செல்லமாக அழைப்படும் நடிகை ராஷ்மிகா, Kirik Party என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
திருமணம் நின்றது ஏன்?
இதனை தொடர்ந்து ஒரு சில கன்னட படத்தில் நடித்த போதும், எதிர்பார்த்த அளவிற்கு பெயர் எடுக்காததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்து, நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் 21வது வயதில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
மாறாக நிச்சயத்தோடு திருமணம் நின்று, அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன் பின்னர், தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் “கீத கோவிந்தம்” படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மீண்டும் அவருடன் “டியர் காம்ரேட்” என்ற படத்தில் நடித்தார்.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள். மாறாக இருவரும் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை.
வாடகை கூட தரமுடியாத நிலை
இந்த நிலையில் ராஷ்மிகா, நேற்றைய தினம் தன்னுடைய 29ஆவது பிறந்த நாளை கடற்கரை அருகே ஓபன் விடுதியொன்றில் கொண்டாடியுள்ளார்.
இவர், விஜய் தேவர்கொண்டாவுடன் தான் வெளிநாட்டுக்கு சென்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனை இருவரும் விமானநிலையத்தில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ சிறுவயதில் பெற்றோர் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டனர்.
அவர்கள் கையில் பணமே இருக்காது, பணம் இல்லாததால் வீடு வாடகை கொடுப்பதற்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். இதனால், மற்றவர்களிடம் பேசவும், பழகவுமே பயமாக இருந்ததாக ராஷ்மிகா..” என பேசியிருக்கிறார்.
ஒரு காலத்தில் வீட்டு வாடகைக்கூட கட்டமுடியாமல் தவித்து ராஷ்மிகா, இன்று 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |