பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!
பொன்னியின் செல்வன் “பூங்குழலி” ஐஸ்வர்யா லட்சுமி டயட் பிளான் தொடர்பான சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
மருத்துவ படிப்பை படித்து விட்டு சினிமாவில் இருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் தான் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் பட்டைய கிளப்பி வருகிறார்.
இவர் சமிபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அழகின் ரகசியம்
இவரின் உடலை பார்த்து பலர் இவரின் டயட் பழக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.
அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த அழகிற்கு முக்கிய காரணம் அவரின் டயட், வொர்கவுட் தானாம்.
காலை, மாலை என இரண்டு வேளைகளும் இவர் ஜீம் செல்வாராம். என்ன நடந்தாலும் ஜிம் செல்வதை தான் நிறுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார்.
டயட் பழக்கம்
இந்த நிலையில் லட்சுமிகார்டியோ பயிற்சிகள் செய்வாராம். கார்டியோ பயிற்சி மூலம் தான் தன்னுடைய எடையை 55 கிலோவில் தக்க வைத்து வருகிறாராம்.
- காலை - 3 கிளாஸ் வெந்நீர், வேக வைத்த முட்டை மற்றும் பழங்கள் இவை அனைத்தும் தான் சாப்பிடுவாராம். மேலும், உப்பு நிறைந்த துரித உணவுகள், ஐஸ்கீரிம், சாக்லேட் ஆகிய உணவுகள் பக்கம் தப்பி தவறிக் கூட செல்ல மாட்டாராம்.
- மதியம் - வொர்கவுட் செய்து விட்டு சாதம், அவித்த காய்கறிகள் எடுத்து கொள்வாராம். அதிகமாக பழச்சாறு எழுத்து கொள்வாராம்.
- இரவு - லைட் வெயிட் உணவுகளை சாப்பிடுவாராம். அதாவது இட்லி, இடியப்பம் ஆகிய உணவுகள்