குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் நயன்- விக்கி ஜோடி?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நாடு திரும்பிவிட்டார்கள்.
தேனிலவில் உற்சாக கொண்டாட்டம்
திருமணத்திற்கு முன்பே நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் நயன்தாரா தற்போதைக்கு தேனிலவுக்கு செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு தேனிலவுக்கு சென்றார்.
அங்கிருந்தபடியே கணவனும்- மனைவியுமாக ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தனர்.
செல்லமே தங்கமே என இருவரும் கொஞ்சிக் கொள்ளும் படங்கள் வைரலானது.
படப்படிப்பில் நயன்தாரா
நாடு திரும்பிய கையோடு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் இந்தி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவனுக்கும், அஜித் நடிப்பில் ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்த படத்தில் அஜித் ஜோடியாக தன் மனைவி நயன்தாராவை தான் நடிக்க வைக்கிறார்.
அஜித் படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
தற்போதைக்கு குழந்தை வேண்டாம்
கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமே என நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனிடம் கூறினாராம்.
அதற்கு அவரும் உன் விருப்பம் தான் என் விருப்பம் தங்கமே என்று கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வனிதாவை தங்கையாக ஏற்றுக்கொள்வீர்களா? அருண் விஜய்யின் நச் பதில்