பிக் பாஸிலிருந்து வெளியேறிய நிக்ஷன்... குஷியில் ஐஷுவின் தந்தை போட்ட வைரல் பதிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நிக்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஐஷுவின் தந்தை போட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ரவீனா மற்றும் நிக்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஷுவின் தந்தை பதிவு
பிக் பாஸ் வீட்டிற்கு ஐஷு இருக்கும் போது நிக்ஷன் இருவரும் காதலித்து வந்ததும், இருவரும் முத்தம் கொடுத்து முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர்.
பின்பு ஐஷு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நிக்ஷனின் ஆட்டம் சற்று குறைந்து வந்தது. ஆனாலும் நிக்ஷன் எலிமினேட் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த ஐஷு ஒரே ஒரு பதிவை மட்டும் போட்டிருந்தார். மன அழுத்தத்தினால் தற்கொலை செய்ய முயன்றதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நிக்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐஷுவின் தந்தையின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் ஸ்பைடர் படத்தில் நிறைய பேர் இறந்து அங்கு அழுகை சப்தத்தை கேட்டவுடன் காதுகளுக்கு இனிமையாக இருப்பதை போன்று ரியாக்ஷன் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படத்தை போட்டுள்ளார்.
இதன் மூலம் நிக்ஸன் எலிமினேட் ஆவதில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மறைமுகமாக ஐஷுவின் தந்தை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |