ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது?
கணவருக்கு தொண்டையில் அடைக்கிறது என தண்ணீர் கேட்ட மைனா நந்தினியை காக்க விட்ட விமானப் பணிபெண்ணிற்கு எதிரான காணொளிக்கு ஏர் ஏசியா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மைனா நந்தினி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நந்தினி.
இவர் இந்த சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால், அதன் பின்னர் அவருடைய பெயருக்கு முன்னாள் மைனா என சேர்த்துக் கொண்டார்.
சின்னத்திரையை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், வெள்ளத்திரை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
பதில் கொடுத்த ஏர் ஏசியா
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6-ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார். தற்போது மைனா விங்ஸ் என்கிற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இவ்வளவு பல சாதனைகளை செய்த மைனா நந்தினி தற்போது வெள்ளத்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவிற்கு பயணம் செய்த போது அவருடைய கணவர் யோகியின் தொண்டை அடைக்கிறது என விமான பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்த விடயத்தை காணொளியாக பதிவிட்டிருந்தனர்.
இதனை பார்த்த ஏர் ஏசியா நிறுவனம் இருவரும் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் பொழுது மன்னிப்பு கேட்டுள்ளது. அத்துடன் நிறுத்தாமல் மைனா நந்தினியின் கோரிக்கைக்கு அமைய அங்கிருந்த பயணிகளுக்கு தண்ணீரும், ஸ்நாக்ஸ்களும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை மைனா நந்தினியும் அவருடைய கணவரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |