உக்ரைன் மீது ரஷ்யா போர்.. சிக்கிய இந்தியர்களின் நிலை என்ன?
உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து ரஷியா உக்ரை நாட்டில் போர் தொடுக்க எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.
இதனால், ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்நிலையில், ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், ரஷியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இணைய வசதி முழுவதும் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலையை குறித்து மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் குண்டு வீச்சு காரணமாக திரும்பி வந்து உள்ளது.
இதனால் இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.