விமானத்தின் உள்ளே நுழைந்த சிறுவன்! கட்டியணைத்து வரவேற்ற விமான பணிப்பெண்: சுவாரசிய பின்னணி
எமிரேட்ஸ் விமானத்தில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், தான் விமானத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, ஐந்து வயது சிறுவன் உள்ளே நுழைந்துள்ளான்.
போர்டிங் பாஸ் எடுத்த அந்த சிறுவன், தனது பாஸ் போர்ட் மற்றும் போர்டிங் பாஸுடன் விமானத்திற்குள் நுழைகிறார். சிறுவனைக் கண்டதும் அங்கே நிற்கும் விமான பணிப்பெண் சிறுவனை வரவேற்றத்துடன் அவரை கட்டியணைக்கவும் செய்கிறார்.
வழக்கம் போல, அந்த சிறுவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கூலாக ஏறி உள்ளே செல்லும் போது கேமராவை திரும்பி பார்த்து கையசைத்த படியும் கடந்து போகிறார்.

இதற்கு காரணம், விமான பணிப்பெண்ணாக இருக்கும் பெண்ணின் மகன் தான் அந்த சிறுவன் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனது மகனை வேற லெவலில் விமானத்தில் வரவேற்பதுடன் மட்டுமில்லாமல், அவரை கட்டியணைத்து வரவேற்கும் இந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.