Hug My Younger Self: டிரெண்டாகும் ஜெமினி AIன் அடுத்த புகைப்படம்
சமீபகாலமாக AI புகைப்படங்கள் டிரெண்டாகி கொண்டிருக்கின்றன. Google Gemini's Nano Banana மூலம் அழகான அற்புதமான தருணங்களை புகைப்படங்களாக உருவாக்கலாம், சேலை உடுத்தியபடி நேர்த்தியான புகைப்படங்களை பயனர்களை உருவாக்கி கொண்டிருக்கும் வேளையில் அடுத்ததாக உங்களது சிறுவயது நபரை நீங்களே கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கலாம்.
சினிமாவில் தான் இது சாத்தியம் என்பது இல்லாமல் உணர்வுபூர்வமாக புகைப்படங்களை உருவாக்கவும், கற்பனைதிறனையும் அதிகப்படுத்துகிறது.
எப்படி உருவாக்கலாம்?
* ப்ளே ஸ்டோரில் இருந்து Gemini செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
* இரண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுங்கள், ஒன்று தற்போதைய புகைப்படம், மற்றொன்று உங்களது சிறுவயது புகைப்படம்.
* அடுத்ததாக, ”click a cute polaroid picture of my older self hugging my younger self” என்று டைப் செய்யவும்.
* சில நிமிடங்களில் உங்களது புகைப்படம் தயாராகிவிடும், உங்களுக்கு அது விருப்பமில்லையென்றால் Redo ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளவும்.