ரங்கராஜ் பாணியிலேயே பதிலடி கொடுத்த ஜாய் கிரிசில்டா! என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ரங்கராஜ் பாணியில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிசில்டா
அண்மைக்காலமாக இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
இந்திய பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
ஆனால் இவரின் எல்லா புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனால் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை தற்போது பொது பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என கூப்பிட்டு பேசியதாக காணொளியொன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருந்தார்.
குறித்த காணொளி இணையதளத்தில் வைரலாகியது. குறித்த காணொளியில் தான் எழுந்தது, குளித்தது, சாப்பிட்டது, வேலைக்கு செல்வது என பல விஷயங்களை பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் குறிப்பிட்டிருந்தார்.
அதனை கலாய்ப்பது போல குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து ஒரு காணொயியை வெளியிட்டார்.
இது இணையத்தில் வைராலானது. அந்த காணொளிக்கு கீழ் மாதம்பட்டி ரங்கராஜ் ரொமான்ஸ் பத்தல எங்கிட்ட 2 weeks ட்ரெயினிங் வா... என குறிப்பிட்டு கமெண்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
தற்போது இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜாய் கிரிசில்டா தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, எங்கிட்ட 2 weeks ட்ரெயினிங் வாங்க toxic மனிதர்களிடம் இருந்து வெளியேறி எப்படி மகிழ்ச்சியாக வாழ்வதென சொல்லித்தருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

