தனிமையால் பாதிக்கப்பட்ட AI நிபுணர்.. செயற்கை நுண்ணறிவு நிஜ வாழ்க்கை காதலா?
தனிமையால் பாதிக்கப்பட்ட AI நிபுணர் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்ட செய்தி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பொதுவாக இளம் வயதிற்கு வந்துவிட்டாலே எப்போது திருமணம்? என கேட்காதவர்கள் பாவம் செய்தவர்களாக இருக்க வேண்டும். யாரை, எங்கு பார்த்தாலும் திருமணம் குறித்து விசாரித்து கொண்டே இருப்பார்கள்.
அப்படி தன்னுடைய பெற்றோர்களால் மன உளைச்சலுக்கு ஆளான நிபுணர் ஒருவர் தான் இயக்கி வைத்திருந்த யிங்யிங் என்ற ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமணத்தை பார்த்த இணையவாசிகள் மிரண்டு போயுள்ளனர். அதே போன்று சீனாவை சேர்ந்த குறித்த பொறியாளர், தனிமை மற்றும் வீட்டாரின் தொல்லை ஆகிய காரணங்களால் இப்படி செய்தாக கூறியுள்ளார்.

ஓரின திருமணம் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்தது.
இதனை தொடர்ந்து ரோபோவை திருமணம் செய்து கொண்ட செய்தி இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |