இத்தனை வயது வித்தியாசம் இருந்தால் திருமணம் செய்யாதீங்க- எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியர், திருமணம் செய்யும் முன்னர் தம்பதிகளிடையே வயது வித்தியாசம் அவர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதாக கூறுகிறார்.
அந்த வகையில், சாணக்கியர் திருமணம் குறித்து அப்படி என்னென்ன விடயங்களை சுட்டிக் காட்டுகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வயது முதிர்ந்தவரை திருமணம் செய்தால் என்ன நடக்கும்?
1. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கணவன் -மனைவியின் வயது வித்தியாசம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் பொழுது பல பிரச்சினைகள் எழும் என சாணக்கியர் கூறுகிறார். இதனால் வயது முதிர்ந்தவர்கள் இளம் பெண்களை திருமணம் செய்ய விரும்பக் கூடாது.
2. கணவன்-மனைவியாக இருப்பவர்கள் உறவில், ஒருவரையொருவர் எல்லா வகையிலும் திருப்தியாக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இருந்தால் பிரச்சினை ஏற்படும். அத்துடன் இருவரும் ஒரே மாதிரியாக சிந்திக்கவும் வேண்டும். அதுவும் வாழ்க்கைக்கு அவசியம்.
3. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறாவிட்டால் காலப்போக்கில் ஒருவரையொருவர் ஏமாற்றக்கூடும். கணவன் - மனைவி உறவு என்பது எப்போதும் புனிதமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கை ஏமாற்றம் இருந்தால் குடும்ப தாம்பத்திய வாழ்க்கை விரைவில் முறிவு ஏற்படும் என சாணக்கியர் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |