ஆண்மை குறைவை சரிசெய்து எண்ணற்ற பலன்களை அளிக்கும் அகத்திகீரை.. எப்படி உண்ண வேண்டும்? காணொளி விளக்கத்துடன்...
பொதுவாக அனைத்து வகையான கீரைகளிலும் பலவிதமான சத்துகள் நிறைந்தே உள்ளன. அதிலும், அகத்தி கீரையில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளன. இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அகத்தி கீரை இரும்பு சத்து நிறைந்ததோடு மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு சாப்பிடாதோருக்கு, அதற்கு இணையான ஆண்மைக்கு பலமளிக்கும் சத்துக்களையும் கொடுக்கிறது.
இதில் கால்சியம் அதிகம் உள்ளது. பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும், குடலுக்கும், குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதேப்போல், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதனைத் தடுக்க, அகத்திக்கீரை தான் அருமருந்து. இதுமட்டுமின்றி, அகத்திக்கீரையை காம்பு நீக்கி அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்த்து காரத்துக்கு மிளகு சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டாலே வயிற்றுபுண் குணமாகும். அமாவாசை விரத காலங்களிலும், வைகுண்ட ஏகாதசி காலங்களிலும் அகத்திக் கீரை உணவை எடுத்துகொண்டார்கள்.
நமது முன்னோர்கள் உணவை மருந்தாக்கி எடுத்துகொண்டதற்கு இதுவும் உதாரணமாக சொல்லலாம். மேலும் இந்த அகத்திகீரையில் வேறு என்னென்ன பயன்கள் உள்ளது என குறிப்பிட்ட காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்....