சாப்பிட்டவுடன் 100 அடிகள் நடந்தால் என்ன ஆகும்? கண்கூடாக தெரியும் அதிசயம்
சாப்பிட்ட பின்பு 100 அடிகள் நடந்தால், பல ஆரோக்கிய நன்மைகளை பெறமுடியும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நடைபயிற்சி
நடைபயிற்சி என்பது மனித ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஆயுர்வேதத்தின் படி மனம், உடல், ஆன்மா இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் சாப்பிட்ட பின்பு 100 அடிகள் நடந்தால் செரிமானத்தை மேம்படுத்துமாம். செரிமானம் சீராக இருந்தால் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குவதுடன், அஜீரணம், வீக்கம், வலி ஆகிய பிரச்சினைகள் குறையும்.
இவ்வாறு நடைபயிற்சி மேற்கொண்டால், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சரக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டவுடன் சிறிது நடப்பது நல்லது.
இதே போன்று மன அழுத்தம் உள்ளவர்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுவது பாதிக்கப்படுவதுடன், போதிய ஆற்றல் இல்லாமல் எப்பொழுதும் சோர்வாகவே இருப்பார்கள். இவர்களுக்கு நடைபயிற்சி மிக முக்கியமாகும்.
ஆயுர்வேதத்தின் படி. இவ்வாறு நடைபயிற்சி மேற்கொண்டால், தூக்க கோளாறுகள் சரியாவதுடன், நிம்மதியான தூங்கவும் உதவி செய்கின்றது.