சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த ஆப்கான் சிறுமி!! உலக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒற்றை புகைப்படம்
பெல்ஜியத்தில் குடும்பத்துடன் தரையிரங்கிய சிறுமி சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் வசப்படுத்திய பின்னர், மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திக்கிடக்கின்றனர், இவர்களை அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் பத்திரமாக வெளியேற்றி வருகின்றன.
இந்நிலையில் தாய், தந்தையுடன் பெல்ஜியம் வந்திறங்கிய சிறுமி ஒருவர், துள்ளிக்குதிக்கும் ஒற்றை புகைப்படம் வைரலாகி வருகிறது.
Reuters புகைப்பட நிருபரான Johanna Geron என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
This is what happens when you protect refugees...
— Guy Verhofstadt (@guyverhofstadt) August 26, 2021
Welcome to Belgium, little girl !
Wonderful @Reuters picture via @POLITICOEurope pic.twitter.com/v1127frvf9