கோவிலில் வைத்து நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்: கண்டபடி விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனிற்கு இயக்குனர் முத்தம் கொடுத்த சம்பவம் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம்
இராமாயண கதையை ஒரு பகுதியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.
[RJ7HFC ]
இத்திரைப்படத்தில் ராமனாக பாகுபலி புகழ் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணணாக சயிப் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்கள்.
மேலும், இந்த திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிடவுள்ளனர். ஜூன் 16ஆம் திகதி வெளியாகும் என்ற தகவலையும் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இயக்குனரின் மோசமான செயல்
இந்நிலையில், படபிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படம் வெற்றிபெற வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்.
கோயில் தரிசனம் எல்லாம் முடிந்ததும் ரசிகர்கள் எல்லோரிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்ப தயார் ஆனார். அப்போது இயக்குனர் ஓம் ராவத்திடம் சொல்லி விட்டு போக வேண்டும் என்று அவரிடம் போய் சொல்ல அவர் கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார்.
இதனை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் விட இந்த செய்தியும் வீடியோவும் படும் வைரலாகி வருகின்றது.
Pecks & flying kiss are not allowed & it’s basic sense they shouldn’t do this in temple premises. #Bollywood actor #KritiSanon greeted Director #OmRaut with a peck & in return #OmRaut with a flying kiss while leaving after #LordVenkateshwara darshan in #Tirupati. pic.twitter.com/qiGEs6gwyD
— Sowmith Yakkati (@sowmith7) June 7, 2023