Viral Photo : குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகளின் பெயர் அறிவிப்பு
இத்தம்பதி தற்போது குழந்தைகளின் முழு பெயரையும் வெளியிட்டனர். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என குழந்தைகளின் பெயர்களுக்கு கடைசியில் முதலில் நயன்தாராவின் N வருவது போலவும் கடைசியில் விக்னேஷ் சிவனின் சிவன் வருவது போலவும் பெயர் வைத்துள்ளனர்.
கும்பகோணத்தில் நயன்தாரா - விக்னேஷ் வழிபாடு
குலதெய்வ கோலில் வழிபாடு செய்ய திருச்சி விமான நிலையத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வந்திறங்கினர்.
இதனையடுத்து, கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன், நயன்தாரா சாமி சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் முடித்து விட்டு வரும்போது, கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#JUSTIN கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம்
— ChannelVision (@iChannelVision) April 5, 2023
கல்லூரி மாணவர்களுடன் புகைப்படம்
எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா#VigneshShivan | #Nayanthara | #Kumbakonam | #ChannelVision pic.twitter.com/PGGqnJbqcc
The way they walk holding each other's hands ❤️
— Ever & Forever for Nayan ?? (@SathsaraniSew) April 5, 2023
Finally Nayan got a perfect partner in her life with caring, freedom, supporting & lots of love too ?❤️#LadySuperStar #Nayanthara@VigneshShivN pic.twitter.com/mVLbTYlFiV