உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தனுஷ் வெளியிட்ட புகைப்படம்! அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஹாலிவுட் என ரவுண்டடிக்கும் தனுஷ் தற்போது 'வாத்தி' என்ற தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.
தற்போதுதான் மீண்டும் சென்னை வந்துள்ளார் போலிருக்கிறது. அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனுஷ் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மகனுடன் பதிவிட்ட புகைப்படத்தில் கூட அவர் முகத்தை சரியாகக் காட்டவில்லை. இப்போது சற்றே வளர்ந்த முடியுடன், தாடி, மீசை இல்லாமல் பள்ளி மாணவன் போல இருக்கிறார்.
தனுஷ் இப்படி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்க, ஐஸ்வர்யா தனுஷ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என டாக்டருடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு பதிவுகளிலும் தனுஷின் அண்ணியும், செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் கமெண்ட் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.