தீக்குழி இறங்கிய மாகாபா.. தீராத வேண்டுதல்- கூடி நின்று விசாரிக்கும் மக்கள்
தீராத வேண்டுதலில் இருக்கும் மாகாபா ஆனந்த், தீக்குழி இறங்கி மக்களை அவர் பக்கம் திருப்பியுள்ளார்.
அது இது எது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் அது இது எது.
இந்த நிகழ்ச்சியை மக்கள் நண்பன் மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
எதிர்வரும் ஆக்ஸ்ட் 24 ஆம் தேதி அது இது எது நிகழ்ச்சியில் தன்னுடைய நான்காவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சீசனையும் மாகாபாவே தொகுத்து வழங்வுள்ளார்.
பிரபலங்களை எண்டர்டைம் செய்து மக்களை குஷிப்படுத்தும் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
தீக்குழியில் மாகாபா
இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான ப்ரோமோ காட்சியில் மாகாபா ஆனந்த் மஞ்சள் நிற ஆடை அணிந்து, கொண்டு பக்தி பழமாக தீச்சட்டி எடுத்து வருகிறார். அத்துடன் நிறுத்தாமல் தீக்குழியில் இறங்கி அம்மனுக்கு சீசன் குறித்து கூறுகிறார்.
இதனை பார்த்த மக்கள்,“ மக்களை சிரிக்க வைக்கும் மாகாபாவிற்கு அப்படி என்ன பிரச்சினை..” என விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியாக இந்த சீசனுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |