கயல் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் மாற்றம்.. இனி இவர் தானாம்
கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கயல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல்.
இந்த சீரியலை பி. செல்வம் இயக்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இந்த சீரியல் 1100 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலை நடிகை நயன்தாராவும் விடாமல் பார்த்து வருவதாக பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், சீரியலில் சைத்ரா ரெட்டியின் சகோதரராக மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் ஐயப்பன் நடித்து வந்தார். இவரின் நகைச்சுவைக் கலந்த குணசித்திர பாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.
குடும்ப பிரச்சினை
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஐயப்பனின் மனைவி, கயல் தொடரின் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, தன்னை ஐயப்பன் தினமும் குடித்து விட்டு துன்புறுத்துவதாக புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பேசிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் ஐயப்பனின் காட்சிகள் கயல் தொடரில் ஒளிபரப்பு செய்யப்படாமல் இருந்தன.
கயல் சீரியலில் ஐயப்பன் இருக்கிறாரா? என ரசிகர்கள் குழப்பமடைய ஆரம்பித்து விட்டனர். இந்த குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கயல் தொடரில் இருந்து ஐயப்பன் விலகியுள்ளதாகவும், இனி வரும் எபிசோட்களில் மூர்த்தி பாத்திரத்தில் பாடகர் ஷ்யாம் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன.
ஷ்யாம் யார்?
பாடகர், நடிகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் ஷ்யாம். திரைப்பட பாடகர் மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகளில் கனா பாடல்களை பாடி வருகிறார.
அதே சமயம், சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், முத்தழகு, கண்ணா கண்ணே, சக்திவேல் உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்து அவருக்கு என தனி இடம் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |