கவுண்டமணியுடன் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? இயக்குநரின் அப்பா தானாம்
பெரிய கருப்பு தேவரின் பழைய காலத்து புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பெரிய கருப்பு தேவர்
தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பெரிய கருப்பு தேவர்.
இவர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர். திரு சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கப்பட்ட நாடகக்குழுவில் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். அத்துடன் நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் இருக்கிறார்.
இவர் இயக்குனர் பாரதிராஜாவின் “ மண்வாசனை ” கங்கை அமரனின் கரகாட்டக்காரன் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டியிருப்பார்.
இந்த நடிகர் யார் தெரியுமா?
இந்த நிலையில் இவர் சிறுவயதில் நடிகர் கவுண்டமணியுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தை பார்த்த சிலர் யார் இவர் ? என திகைத்தாலும் கடைசியில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அவர் மறைந்து விட்டாலும் அவருடைய மகன் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் க/பெ ரணசிங்கம்.
இது குறித்து பேசிய அவர், “ என்னுடைய அப்பா 53 வருடங்கள் சினிமாவில் இருந்தார் ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. மாறாக சினிமாவில் நானும் சாதிக்க வேண்டும் தான் களத்தில் இறங்கியுள்ளேன்.
எனக்கு சினிமா ஆசை என்னுடைய அப்பாவை பார்த்து தான் அதிகமானது...” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், “ அட நீங்க இவரு மகனா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |