காதலரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை... கொள்ளை அழகில் வெளியான புகைப்படம்
நடிகை யாமி கவுதம் திடீரென்று நேற்று திடீர் திருமணம் செய்து கொண்டதையடுத்து, பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என கவனம் செலுத்தி வருபவர் நடிகை யாமி கவுதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.
யாமி கவுதம் 2019ஆம் ஆண்டு வெளியான யூரி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தில் நடித்தார். ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விக்கி கௌஷல், பரேஷ் ராவல், யாமி கவுதம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் உருவானது.
அதனை தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துகொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவில், “எங்கள் குடும்பத்தினர் ஆசீர்வாதத்தோடு நெருங்கிய நபர்கள் மட்டும் பங்கு கொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்துமுடிந்தது. அன்பும், நட்பும் சூழ இந்த பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்கள் கோருகிறோம்” என பதிவிடப்பட்டிருந்தது.
With the blessings of our family, we have tied the knot in an intimate wedding ceremony today.
— Yami Gautam (@yamigautam) June 4, 2021
As we embark on the journey of love and friendship, we seek all your blessings and good wishes.
Love,
Yami and Aditya pic.twitter.com/W8TOpAJxja