பிரபல சீரியலிலிருந்து திடீரென விலகிய நடிகை... எமோஷ்னலாக அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?
பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி என்ற ரோலில் நடித்து வந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது திடீரென விலகி உள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பூவே உனக்காக. அதில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் ஜோவிதா லிவிங்ஸ்டன். அவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சீரியலில் முதன் முதலாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திடீரென இதிலிருந்து விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் எமோஷ்னலான ஒரு பதிவுடன் இதை ஜோவிதா அறிவித்து உள்ளார். தான் மேற்படிப்பை தொடர உள்ளதால் தான் சீரியலில் நடிக்க முடியவில்லை என அவர் கூறி உள்ளார். "
பூவே உனக்காக சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டேன். உங்களுக்கு கனத்த இதயத்துடன் இதை தெரிவிக்கிறேன். நான் என் மேற்படிப்பை துவங்க உள்ளதால் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிவிட்டேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக நான் நன்றி உள்ளவராக இருப்பேன்." " உங்கள் ஆதரவு இல்லை என்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.
நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் எனக்கு ஆதரவாக நீங்கள் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். என் அடுத்த ப்ராஜெக்ட் உடன் உங்களை சந்திக்கிறேன்." என்று கூறியுள்ளார்.