கோலாகலமாக நடந்த நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: குவியும் வாழ்த்துக்கள்
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகை வரலக்ஷ்மி
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சிறந்த கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.
வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு காதலர் நிக்கோலை சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
வரலக்ஷ்மியின் வருங்கால கணவருக்கு அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு டீனேஜில் மகள் இருக்கிறார் என்பதும் இணையத்தில் பேசு பொருளாக மாறி இணையத்தில் புதிய புயலையே கிளப்பியது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கோலாகலமாக இடம்பெற்ற வரலக்ஷ்மி சரத்குமாரின் மெஹந்தி விழா மற்றும் சங்கீத் விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து தள்ளியது.
இந்த நிலையில் தற்போது வரலட்சுமி- நிக்கோலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது.இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/e703da8c-8845-46be-8bd8-46c3f5559dfc/24-6686826352b2c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/38ac40be-1bd8-4383-9f5f-e0d4fb64f5cc/24-66868263bf7b2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cbbd74d4-4528-4f37-907d-e5b7379c4a56/24-66868264428ad.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ba74e7d9-d933-4687-9ccf-42f1414ade05/24-66868264ad931.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c88639d3-e5b0-4f4f-84a1-ba40cf6b642c/24-6686826524c20.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0f2756c-e8aa-49ea-a62b-a91bd5ee7222/24-668682658fc7a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/36b82b96-4a85-42b4-8e85-90b8e3aba5bc/24-66868266096c6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3163637b-1863-40f1-beed-6c764a7a0f6f/24-6686826673067.webp)