Baakiyalakshmi: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரி.. கொதித்தெழுந்த குடும்பத்தினர்- மரண பீதியில் கோபி
ஈஸ்வரியை அசிங்கமாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத கோபி, மாமியாரை மிரட்டியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ராதிகா கர்ப்பமாக இருக்கும் பொழுது பாக்கியா வீட்டில் ஏற்பட்ட சண்டையால் ராதிகாவுடன் ஈஸ்வரியும் கிளம்பி அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஈஸ்வரி, ராதிகாவுடன் அவர் வீட்டிற்கு வந்தது கமலாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் வீட்டில் சண்டையாகவே இருந்தது.
கொலை மிரட்டல் விட்ட கோபி
இந்த நிலையில் வீட்டில் கோபி இல்லாத நேரம் ராதிகா தவறி விழுந்து விட்டு அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என கோபியிடம் கூறி விட்டார்.
தவறி விழுந்த காரணத்தால் ராதிகா - கோபியின் குழந்தையும் கலைந்து விட்டது. இதனை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி கமலா வெளியே அனுப்பி விட்டார்.
இந்த சம்பவம் கோபி, ஈஸ்வரி என அனைவரையும் பாதித்துள்ளது. பிரச்சினைகள் ஒரு புறம் வெடித்து கொண்டிருக்கும் போது கமலா, கோபியையும் அவரின் அம்மாவையும் தரம்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார்.
மாமியார் பேசுவதை ஒரு அளவிற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத கோபி, “ இப்படியே பேசினால் கொலை செய்து விடுவேன்..” என மிரட்டியுள்ளார். கோபி இப்படி பேசுவதை பார்த்த கமலா பார்த்து மிரண்டு போயுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட ஈஸ்வரி
கமலா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊரிலிருந்து வந்த ஈஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாக்கியா வீட்டு பக்கம் பொலிஸ் வண்டியை பார்த்ததும் ஓடி வந்து கோபி என்ன நடந்தது என கேட்க கோபியின் அப்பா அவரை சரமாறியாக தாக்கி விடுகிறார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கமலாவின் வேலையை கோபி கண்டுபிடித்தால் இனி என்ன செய்ய போகிறார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |