Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்
நடிகை வரலட்சுமி தனது காதலர் நிக்கோலாயை திருமணம் செய்த நிலையில், மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வரலட்சுமி
சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பெரும் கோடீஸ்வரர் ஆவார். தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நிக்கோலாயிடம் நல்ல பழக்கம் இருக்கின்றது.
தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை திறம்பட கையாண்டு வரும் இவர், ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் தான் இவர் நடிகை வரலட்சுமியைக் காதலித்து வந்த நிலையில், சரத்குமார் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து கோலாகலமாக திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
காந்தராஜ் பேட்டி
இந்நிலையில் குறித்த ஜோடிகளைக் குறித்து மருததுவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறுகையில், "நிக்கோலாய் ஆபத்தானவராகக் கூட இருக்கலாம். முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்திருக்கலாம். அதோடு பல பெண்களுடன் தொடர்பிலும் இருக்கலாம்.
குறித்த திருமணத்திற்கு சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை என்றும் வரலட்சுமி அவரை சரியான வகையில் நடத்தாமல் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் திருமணம் செய்திருந்தால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்று தாய்லாந்தில் நடத்தியிருக்கலாம் என்றும் வரலட்சுமி 39 வயதில் திருமணம் செய்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கலும் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவர்களுக்குள் எந்தவொரு காதலும் இல்லை, சமூக பாதுகாப்பிற்காகத் தான் நடந்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். காந்தராஜ் கூறியதை அவதானித்த பார்வையாளர்கள் ஏன் தேவையில்லாமல் தலையிட்டு இப்படி யூகத்தினை கூற வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |