Siragadikka Aasai: திடீரென நகையைக் கேட்ட பாட்டி... பதிலளிக்க முடியாமல் தடுமாறும் மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு மகன் வீட்டிற்கு வந்துள்ள பாட்டி மீனாவிடம் நகையைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் அதிகமாக கவர்ந்து வருகின்றது. எதிர்நீச்சல் சீரியலுக்கு பின்பு குறித்த சீரியல் தான் டி.ஆர்.பி-யிலும் நம்பர் 1 ஆக இருந்து வருகின்றது.
மாமியார் கொடுமையை அனுபவிக்கும் மருமகள், தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகன் என்று மிகவும் சுவாரசியமாக இந்த சீரியல் செல்கின்றது.
மூத்த மகனுக்கு அதிகமாக சப்போட் செய்யும் விஜயா மீனாவிற்கு பாட்டி நாச்சியார் கொடுத்த நகையை தூக்கி மனோஜிற்கு கொடுத்துள்ளார்.
இது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாத நிலையில், முத்து மீனாவிற்கு மட்டும் இது தெரியவந்துள்ளது. ஆனால் இதனை நேரடியாக கேட்டு சண்டையிட வேண்டாம் என்று முத்துவிடம் மீனா சத்தியம் வாங்கியுள்ளார்.
பாட்டி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ள நிலையில், முத்து மட்டும் சோகமாகவே இருக்கின்றார்.
ஆனாலும் முத்து மனோஜ் மீது சரியான கோபத்தில் இருக்கும் நிலையில் வீட்டில் இருந்தால் பிரச்சனை வரும் என்று வீட்டை விட்டு கிளம்பி சவாரிக்கு போயிருக்கிறார்.
நகையைப் பற்றி கேட்ட பாட்டி
அதே நேரத்தில் பாட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு தன்னுடைய மனசுக்கு பிடிச்ச மாதிரி யார் கிப்ட் தராங்களோ அவங்களுக்கு நான் ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுப்பதாக கூறிய நிலையில், அனைவரும் போட்டி போட்டு பரிசுகளை கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பாட்டி மீனாவிடம் உனக்கும் முத்துவிற்கும் சண்டையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மீனா இல்லை என்று சமாளித்து வருகின்றார்.
அதில் மீனா கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டும் போட்டு இருப்பதை பார்த்ததும் பாட்டி இன்னும் நீ அந்த நகைகளை வாங்கி போடவில்லையா? என்று மீனாவிடம் கேட்க, அதற்கு மீனா உண்மையை சொல்ல முடியாமல் மீனா தவித்து வருகின்றார்.
அந்த நகையை விஜயா தரவில்லை என்று பாட்டி மீனாவிடம் மீண்டும் கேட்க, விஜயா மற்றும் மனோஜ் திணறிக்கொண்டிருந்த நிலையில், திடீரென விஜயா அத்தை நகைகளை அப்பவே கொடுத்துட்டேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |