நான் அவரின் முதல் மனைவியிடம் பேசிவிட்டேன்: வரலட்சுமி சரத்குமாரின் பதில்
வரலட்சுமி சரத்குமார் நிச்சயம் செய்துகொண்ட நிலையில் ரசிகர்கள் அவரின் கணவருக்கு எதிரான கேலி கிண்டல் பேச்சுக்கு அதிரடியாக பதில் கொடுத்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார் 2012 ம் ஆண்டு சிம்புவிற்கு ஜோடியாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் கதாநாயகியாக கலக்கிய திரைப்படங்கள் இருக்க வில்லியாகவும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் தனக்கேற்ற கதாபாத்திரங்களில் கெத்தாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்க்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இவரின் வருங்கால கணவரை பற்றி இணையவாசிகள் கொடுத்த விமர்சனங்களுக்கு அவரது முன்னாள் மனைவி பற்றியும் அவரது மகள் பற்றியும் சிறந்த முறையில் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறும் போது 'எனக்கு அவரின் கடந்த கால வாழ்க்யை பற்றி எனக் எந்த கவலையும் இல்லை. இணையத்தில் நாங்கள் சரியான பொருத்தம் இல்லை என்று கூறுகிறார்கள்.
இது என்ன சினிமா படமா? ஹீரோ ஹீரோயின் அழகாக இருப்பதற்கு எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. எனது வாழ்க்கை எனது முடிவு.
நான் அவரின் முன்னாள் மனைவி மற்றும் மகளுடன் பேசினேன். அவரின் மகள் சிறு வயதாக இருந்தாலும் மிகவும் பொறுப்பாக இருக்கிறார்.
இது தவிர இருவரின் திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதிலிருந்து வேறு வாழ்க்கைக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை. அந்த வாழ்க்கைக்குள் வாழ வேண்டும் என்பது கட்டாயமும் கிடையாது' என்று பேசி இருந்தார் வரலட்சுமி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |