சங்கர் மகள் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த இந்த சேலையின் விலை என்ன தெரியுமா?
சங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ள புடவையின் விலை பற்றிய விபரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
இவர் தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் ரஜினி முருகன் திரைப்படம் நடித்ததன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இதனை அடுத்து பல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி மக்கள் மனம் கவர்ந்தார். இவர் நடித்த நடிகையர் திலகம் எனும் படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்.
இவரது அம்மா நடிகை அப்பா பட தயாரிப்பாளராவார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
அதில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சினிமா பிரபல நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில் அட்டகாசமான புடவை அணிந்திருந்தார்.
அந்த புடவையின் விலை கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த இணைய வாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |