எலிமினேட் செய்தவர்களுக்கு சரியான பதிலடி! ஜிபி முத்துவின் காலில் விழுந்த அமுதவானன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் ப்ரொமோ பயங்கர காரசாரமாக சென்று கொண்டுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போட்டியாளர்களின் சுயரூபம் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை 20 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில், பல தெரியாத முகங்களும் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜி.பி.முத்து கொமடி வேற லெவல் என்று தான் கூற வேண்டும். ஆனால் இவ்வாறு காமெடி செய்தவரை சக போட்டியாளர்கள் அவ்வப்போது கதற விட்டுள்ளனர்.
ஜிபி முத்துவை இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பெயர் சேர்த்துள்ளனர். இதற்கு இவர்கள் கூறும் காரணம் தங்களது டீம் வேலையை முடித்துவிட்டு சமையல் டீம்முக்கு சென்று வேலை செய்வதை குற்றமாக கருதுயுள்ளனர். இதற்கு ஜிபி முத்து கடுமையாக கொந்தளித்துள்ளார்.