என்னமா இதெல்லாம்! புது ஹேர்ஸ்டைலில் வனிதா விஜயகுமார்
பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் பக்காவாக மாறிய வனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார்.
இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் கொடுத்தார். ஆனால் இவரால் கடைசி வரை வர முடியவில்லை பாதியில் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார்.
புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் வனிதா
இந்த நிலையில் தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
வனிதா விஜயகுமார் தற்போது பல நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால் இந்த பாப் கட்டிங்கும் ஏதாவது ஷீட்டிங்கிற்காக தான் இருக்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ வனிதாவிற்கு இந்த ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கிறது.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.